முரசொலி ஒரு டாய்லெட் பேப்பர்... திமுகவை வச்சு செய்த அமர் பிரசாத் ரெட்டி.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 2:22 PM IST
Highlights

முரசொலி ஒரு டாய்லெட் பேப்பர் என்றும், திமுகவை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றும் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். அண்ணாமலையை தற்குறி என்றும், தமிழக அரசியலை சாக்கடையாக்கி அதிலே  உழலுபவர் என்றும் அண்ணாமலையை முரசொலி நாளேடு விமர்சித்துள்ள நிலையில், அமர்பிரசாத் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

முரசொலி ஒரு டாய்லெட் பேப்பர் என்றும், திமுகவை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றும் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். அண்ணாமலையை தற்குறி என்றும், தமிழக அரசியலை சாக்கடையாக்கி அதிலே  உழலுபவர் என்றும் அண்ணாமலையை முரசொலி நாளேடு விமர்சித்துள்ள நிலையில், அமர்பிரசாத் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர்  தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதேநேரத்தில் முரசொலியில் சிலந்தி என்ற பகுதியில் ஆர்.என் ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோரை விமர்சித்து எதிர்த்து கட்டுரை எழுதப்பட்டு வருகிறது. இந்த வரிசையில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து சிலந்தி என்ற பகுதியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில், மத்தியில் ஆளும் கட்சி, ஒரு அரசியல்  தற்குறியை தமிழகத்தின் தலைவராக்கி உள்ளது, அந்தப்பேர்வழி தான்தோன்றித்தனமாக உளறி தமிழக அரசியலை சாக்கடையாக்கி அதிலே குதித்து புரள எண்ணுகிறார், தனது பெயருக்கு பின்னே பொதிந்துள்ள ஐபிஎஸ் என்னும் பட்டத்துக்காகவாவது, மதிப்பளித்து கொஞ்சம் தெளிவாக வார்த்தைகளை வெளியிட வேண்டும்.

இதையும் படியுங்கள்: மாணவ மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி குரூப் செக்ஸ்.. இந்த விஷயத்துல அவங்கள சுட்டுக்கொன்றாலும் தவறில்லை.. BJP.!

குருவி தலையில் பனங்காயை வைத்தது போல தன்தலையில் ஏற்பட்டிருக்கும் பதவிக்காவது அவர் மதிப்பளித்து பேச வேண்டும், இல.கணேசன், ஜனா.கிருஷ்ணமூர்த்தி, பொன்ராதாகிருஷ்ணன், கடைசியாக தமிழிசை போன்ற கண்ணியமிகு அரசியல்வாதிகள் வகித்த பதவியில் ஒரு நரக்கள் நடை நாயகனை அமர்த்தியதன் மூலம் அந்தக் கட்சியே சாக்கடையாக மாறி வருகிறது.

இதையும் படியுங்கள்: Go Back Rahul.. கோ பேக் மோடிக்கு பதிலடி.. அதகளம் செய்யும் அர்ஜூன் சம்பத் .

அந்த முடை நாற்றத்தில் சொந்தக் கட்சி ஆதரவாளர்களே மூக்கை பிடித்துக்கொண்டு ஊடகங்களில் பேசுவதை காண முடிகிறது, அவர்கள் கட்சி சார்பில் ஊடக விவாதங்களில் பேசும் அத்தனை பேருமே தமிழக நிதியமைச்சர் குறித்தும், அண்ணாமலை பேசியது தவறு என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னமோ தெரியவில்லை அந்த நபருக்கு ' டாய்லெட் பேப்பர்'  'செருப்பு ' போன்றவற்றில் ஏன் இத்தனை மோகம் என்று புரியவில்லை, ஏற்கனவே ஒருமுறை முரசொலியில் அந்த நபரின் ஐபிஎல் முகத்திரையை கிழித்தபோது, முரசொலி டாய்லெட் பேப்பர் என வர்ணித்து பேசினார்.

அதற்கு முரசொலி  முகத்தில் பூசிய கரியை அந்த டாய்லெட் பேப்பரை கொண்டு துடைத்துக் கொண்டார், முரசொலியில் வரலாறு தெரியாத மூடம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள தமிழக  பாஜக இளைஞரணி-விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, முரசொலி பத்திரிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அதில் அவர் பேசியுள்ள விவரம் பின்வருமாறு:-  இந்தியாவிலேயே மிகப் பெரிய கட்சி பாஜக, அதனுடைய மாநில பொறுப்பில் இருப்பவர் நான், திமுக என்பது ஒரு ரீஜினல் கட்சி, அதுவே 10 கட்சிகளின் துணையில் தொங்கிக் கொண்டிருக்கிறது, அந்தக் கட்சி ஒரு குடும்ப கட்சி, அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் தளபதி இளையதளபதி என்றெல்லாம் வரமுடியும். 

அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அதிகாரம் பொறுப்பு கிடைக்கும், அது குறித்து அந்த கட்சியில்  உள்ள மூத்த அரசியல்வாதிகளே புலம்புகின்றனர். ஆனால் அண்ணாமலை அவர்கள் மக்கள் தலைவராக மாறிவிட்டார், அவர் தன்னையே செதுக்கிக் கொண்டார், அவருடைய அர்ப்பணிப்பு மிகப் பெரியது, ஆனால் முரசொலி போன்ற பத்திரிகைகளில் அவரை விமர்சிக்கின்றன, முரசொலி ஒரு "டாய்லெட் பேப்பர்" முரசொலி என்பது  திமுக நாளேடு அது அப்படித்தான் சொல்லும், வேறு ஏதாவது பத்திரிக்கைகள் அவர் அப்படி விமரிக்கிறதா. இவ்வாறு அமர்பிரசாத் கூறியுள்ளார். 
 

click me!