முரசொலி, அறிவாலயமே ஆக்கிரமிப்பில்தான் கட்டப்பட்டுள்ளது.. திமுகவை சீண்டும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Aug 19, 2022, 4:51 PM IST
Highlights

புதிதாக திமுக பாஜக கூட்டணி அமைக்க தேவையில்லை கூட்டணி அமைக்காமலேயே  தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

புதிதாக திமுக பாஜக கூட்டணி அமைக்க தேவையில்லை கூட்டணி அமைக்காமலேயே  தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆயர் குல தலைவன் மாயோன் திருநாள் கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் செய்த சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  முல்லை நிலத்தின் இறைவன்தான் மாயோன், அது தான் கிருஷ்ண ஜெயந்தியாக மாற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

ஆனால் அதை மாயோன் நாளாக கொண்டாட போராடி வருகிறோம், இது பண்பாட்டு மீழ்ச்சி, தமிழ் விழாக்களை அரசியல் விழாவாக கொண்டாட வேண்டும் நாம் தமிழர் கட்சி அதிகாரத்துக்கு வந்த உடன் இது அரசு விழாவாக கொண்டாடப்படும். நாங்கள் தமிழர்கள் இந்து மதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இந்து  என்பது மதமே இல்லை, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு தமிழக அரசு முழுவதுமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதை தமிழக அரசு வலுவாக எதிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: இது சும்மா ட்ரெய்லர் தாம்மா.. இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு.. இபிஎஸ்ஐ அலறவிடும் வைத்தியலிங்கம்.!

அதேநேரத்தில் செந்தில்பாலாஜி கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், இனியும் திமுக பாஜக கூட்டணி வைக்க தேவையில்லை, கூட்டணி அமைக்காமலேயே தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிஜேபி திமுக கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூற முடியாது, அதை மோடி தான் கூற வேண்டும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக பிஜேபி தன்னை எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறது, பாஜக ஒன்றும் எதிர்க்கட்சி கிடையாது, நாட்டை மொத்தமாக ஐந்து ஐந்து ஆண்டுகளாக பிரித்து கொடுத்துவிட்டால் ஓட்டுப்போடும் செலவாவது மிச்சமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும், ஊழல் போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால் தனித்து தான் போட்டி இடவேண்டும். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை வேகமாக வளர்ந்து வருகிறது, அதேபோல் இலவசங்களை வாங்க கூடாது என கூறுவதற்கு மோடிக்கு தகுதி இல்லை, அதைக்கூற பிஜேபிக்கு என்ன தகுதி இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

பரனூர் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் பத்திரப்பதிவில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பல நீதிமன்றங்கள், வள்ளுவர் கோட்டம் போன்ற பல இடங்கள் ஆக்கிரமிப்பின் தான் கட்டப்பட்டுள்ளது. முரசொலி அலுவலகம், அறிவாலயம் உள்ளிட்ட இடங்கள் ஆக்கிரமிப்பில்தான் கட்டப்பட்டுள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். 
 

click me!