அரசியல்வாதிகள் என்ன பெரிய கடவுளா?  தப்பு பண்ணினா தூக்கி உள்ள போடுங்க!! கோபத்தில் கொந்தளித்த மும்பை நீதிமன்றம்…

First Published Feb 23, 2018, 10:21 AM IST
Highlights
Mumbai high court warn bjp and sivasena persons


அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல அவர்கள் என்ன கடவுளா ? என கேள்வி எழுப்பிய மும்பை உயர் நீதிமன்றம், சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த,  பாஜக மற்றும் சிவசேனா கட்சி  பிரமுகர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த பரசுராம் மஹாத்ரே, சிவசேனாவை சேர்ந்த, அனிதா பாட்டீல் ஆகிய இருவரும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமித்து, வீடு மற்றும் அலுவலகங்களை கட்டிஉள்ளனர். 

இதனை எதிர்த்து  கடந்த, 2016ல், பாரத் மொகால் என்பவர், மும்பை ,உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்  சதுப்பு நிலக்காட்டை அழித்தவர்கள், அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்குகின்றனர். எனவே உயர்மன்றம் தலையிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

.இந்த வழக்கில், அங்குள்ள லோக்கல் தாசில்தார் விசாரணை நடத்தி, சதுப்புநில பகுதியை அழித்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து, அறிக்கை தாக்கல்செய்தார்.

இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள்,எஸ்.சி.தர்மாதிகாரி, பாரதி டாங்கிரி ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது.

அப்போது,அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் அவர்கள் ; கடவுளும் அல்ல என்றும் கடுமை காட்டினர்.

எனவே, ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகள் மீது, போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட, பாஜக மற்றும் சிவசேனா பிரமுகர்கள் பரசுராம் மற்றும் அனிதா பாட்டீல் ஆகியோர்மீது, ஒரு வாரத்திற்குள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

click me!