மும்பை – புனே இடையே ஹைபர்லூப் போக்குவரத்து…   20 நிமிட பயணம்தான் !

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
மும்பை – புனே இடையே ஹைபர்லூப் போக்குவரத்து…   20 நிமிட பயணம்தான் !

சுருக்கம்

Mumbai - Pune hyperloop transport

மும்பை- புனே  இடையே "ஹைபர்லூப்' தொழில்நுட்பத்தில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மகாராஷ்டிர மாநில அரசுடன் விர்ஜின் குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற  விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்தப் போக்குவரத்துக்கான அடிக்கலைலை நாட்டினார்.

போக்குவரத்து துறையின்  எதிர்கால பரிணாம வளர்ச்சியாக விளங்கப் போவது முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் ஹைபர்லூப் (Hyperloop) போக்குவரத்தாகத்தான் இருக்கும்.  

உறை (pod) போன்று வடிவமைக்கப்படும் ஒரு பெட்டியில் பயணிகள் மற்றும் பொருள்களை வைத்து மின் மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வெற்றிடக் குழாய்களில் உந்தித் தள்ளும் முறையில் இந்த புதிய போக்குவரத்துக்கான பணிகள் உலகெங்கிலும் தற்போது நடைபெற்று வருகின்றன.

தற்போதுள்ள வழக்கமான பயணத்தின்போது உராய்வு மற்றும் காற்றுத் தடையால் வேகம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற பிரச்னைகள் ஹைபர்லூப் போக்குவரத்தில் இருக்காது. இதற்கென தரைக்குமேல் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் இரு ஊர்களை இணைக்கும் வகையில் பிரமாண்டமான  காலிக்குழாய்களைக் கொண்டு தொடர்ச்சியாக அமைக்கப்படும் பாதையில் எந்தத் தடையுமின்றி மணிக்கு 450-1000 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும்

இந்நிலையில் மும்பை-புனே இடையே ஹைபர்லூப் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால்  மும்பை-புனே இடையே பயண நேரம் மூன்று மணி நேரமாக உள்ளது, வெறும் 20 நிமிடமாகக் குறையும். இந்த ஹைபர்லூப் வாகனம் முழுவதும் மின்னணு முறையில் இயங்கக் கூடியதாகும்.
இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் முடிக்கப்படும். இதற்கான செலவு எவ்வளவு என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டம் அமலுக்கு வரும்போது ஆண்டுக்கு 15 கோடி பேர் இதில் பயணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல்லை நாட்டினார்.

விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் இந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, "மும்பை-புணே இடையே ஹைபர்லூப் போக்குவரத்தை தொடங்க மகாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்' என்றார்.


ஏற்கெனவே, ஆந்திர தலைநகர் அமராவதி - விஜயவாடா இடையே ஹைபர்லூப் அமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் என்பது குறிப்பிட்டத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!