அரசியலில் சீனியர் விஜயகாந்த் தான்.. கமல்ஹாசன் ஒப்புதல்

 
Published : Feb 19, 2018, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
அரசியலில் சீனியர் விஜயகாந்த் தான்.. கமல்ஹாசன் ஒப்புதல்

சுருக்கம்

kamal agreed that vijayakanth is his senior in politics

சினிமாவின் இருதுருவங்களாக திகழும் ரஜினியும் கமலும் ஒரே நேரத்தில் அரசியலில் குதிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்ட ரஜினி, அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். 

ஆனால், கமலோ ரஜினியை முந்தி சென்று கொண்டிருக்கிறார். வரும் 21ம் தேதி(நாளை மறுநாள்) ராமேஸ்வரத்தில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்னதாக டி.என்.சேஷன், நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், கருணாநிதி என பலரை கமல் சந்தித்துள்ளார். 

இந்நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சென்று கமல்ஹாசன் சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், விஜயகாந்தை சந்தித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அரசியலில் எனக்கு மூத்தவர் என்ற முறையில் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரும் வாழ்த்து தெரிவித்தார் என கமல் கூறினார்.

சினிமாவில் வேண்டுமானால் ரஜினியும் கமலும் எனக்கு மூத்தவராக இருக்கலாம். ஆனால் அரசியலில் நான் தான் சீனியர் என விஜயகாந்த் கூறிவந்த நிலையில், அதே கருத்தை கமலும் வழிமொழிந்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!