தாடியுடன் அடையாளம் தெரியாத முகிலன் !! கூடங்குளத்துக்கு எதிராக கோஷம் !!

By Selvanayagam PFirst Published Jul 6, 2019, 11:17 PM IST
Highlights

4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் தாடியுடன்  அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் முகிலன் கூடங்குளத்துக்கு எதிராகவும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்ய்ப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டபடி சென்றார்.
 

சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்டவர்.

தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுத்தவர். 

கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை அப்பாவி பொதுமக்களாக போராட்டங்களை முன்னெடுத்தவர்
இந்நிலையில்தான் சமூக செயற்பாட்டாளர் முகிலன்  4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடன் கூறியுள்ளார். . முகிலன் ஆந்திர காவல்துறையினர் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். முகிலன்  தாடியுடன் காணப்பட்டார். சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் முகிலனை ஆந்திர போலீசார் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் இழுத்துச் சென்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் அவர் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். மேலும் முகிலன் கூடங்குளத்துக்கு எதிராகவும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்ய்ப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டபடி சென்றார்.

click me!