பல்வேறு சமூக ஊடகங்கள் இந்திய சட்டத்தை மீறுவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2021, 7:00 PM IST
Highlights

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சஞ்சய் தோத்ரே, ஆம்.. சமூக மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்களில் சார்பு குறித்து ஊடக அறிக்கைகள் புகார்கள் மற்றும் சில நீதிமன்ற வழக்குகள் அமைச்சகத்திற்கு வந்துள்ளன. 

பல்வேறு சமூக ஊடகங்கள் இந்திய சட்டத்தை மீறுவது குறித்தும், சமூக ஊடகங்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக  திருத்தம் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே பதிலளித்தார்.

கேள்வி: 1 சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்களில் கூறப்படும் சார்பு மற்றும் 19-வது பிரிவை மீறிய சமீபத்திய வழக்குகள் குறித்து அரசாங்கம் அறிந்து இருக்கிறதா?

கேள்வி: 2 சமூக ஊடக தளங்களில் இந்திய சட்டங்களை பின்பற்றுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதா? அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இந்திய சட்டங்கள் உடன் ஒத்துப் போகின்றனவா? என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சஞ்சய் தோத்ரே, ஆம்.. சமூக மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்களில் சார்பு குறித்து ஊடக அறிக்கைகள் புகார்கள் மற்றும் சில நீதிமன்ற வழக்குகள் அமைச்சகத்திற்கு வந்துள்ளன. இணையத்துடன் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் பெருக்கத்தால் இன்று எந்த ஒரு  தகவலையும் எவர் ஒருவரும் பதிவிட இட முடிகிறது, இதனால் தான் சமூக ஊடகங்கள் மீது அதிக அளவு புகார்கள்  எழுகின்றன. வதந்திகள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு எப்போதும் உள்ளது, இது அரசியலமைப்புப் பிரிவு 19 இரண்டின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை,  

இந்திய குடிமக்களை பாதுகாப்பதற்கும்,  சமூக ஊடகங்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்கள் மூன்றாம் தரப்பு தகவல்களுக்காக தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் 2000 கீழ் உள்ளன , சமூக ஊடகங்களை பொறுப்புக்கூற செய்வதற்கான விதிகளை அரசாங்கம்  திருத்துகிறது, அவை சில விதிகளை பின்பற்ற வேண்டும், அவற்றின் தளம் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் வெளியீடு இதில் அடங்கும். பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆட்சேபிக்கத்தக்க மற்றும் சட்டவிரோதமான எந்த ஒரு தகவலும் ஹேஸ்டேக் செய்ய,  பதிவேற்ற, மாற்றி அமைக்க, வெளியிட, ஒளிபரப்ப, புதுப்பிக்க அல்லது பகிர்ந்து கொள்ள அனுமதி இல்லை.

மேலும் சட்டப்படி (79) 2வது பிரிவு தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கத்தைக் நடுவர் நீதிமன்றம் அல்லது அரசாங்கம் அல்லது அதன் நிறுவன சட்டத்தின் 79 ஆவது பிரிவின் கீழ் உத்தரவிட்டால் அகற்றப்பட வேண்டும். சமூக ஊடக தளங்களை மிகவும் உணர்திறன் மிக்கதாகவும், இந்திய சட்டங்களுக்கு பொறுப்பேற்க கூறவும், இந்த விதிகள் திருத்தப்படுகின்றன. இந்த விதிகள் டிஜிட்டல் மீடியா தளங்களின் நடத்தை, நெறியை கடைப்பிடிப்பதற்கு வலியுறுத்துகிறது. என்றார்.
 

click me!