தமிழர்களை பலிவாங்கவே இலங்கையில் தேசிய கீதம் ரத்து..!? அச்சத்தில் இலங்கை தமிழர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Feb 4, 2020, 9:22 AM IST
Highlights

இலங்கையின், 72வது ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடக்கும் விழாவில், தேசிய கீதம், சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்; தமிழ் மொழியில் பாடப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்ர்கள் மத்தியில் அச்சப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு தமிழர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி இருந்தார் கோத்தபயா.இந்த நிலையில் தமிழில் தேசிய கீதம் ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டன் செய்யும் அளவிற்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, கோத்தபய ராஜபக்சே, இலங்கையின், எட்டாவது அதிபராக பதவியேற்றார். இதையடுத்து, அவரது சகோதரர் மஹிந்தா ராஜபக்சே, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். இலங்கையில், சுதந்திர தின விழாக்களில், 2016ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வந்தன. சிங்கள பாடலின் நேரடி தமிழ் மொழியாக்க பாடல், தேசிய கீதமாக பாடப்பட்டது.

இலங்கை அரசுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின், 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடக்கும் தேசிய விழாவில், நாட்டின் தேசிய கீதம், சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்; தமிழ் மொழியில் பாடப்படாது. எனினும், மாகாணங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடலாம் என்றும் அதில்கூறப்பட்டுள்ளது.

T Balamurukan

click me!