
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இந்த வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 71-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சோனியா காந்தி 1946ஆம் ஆண்டு இதே நாளில் இத்தாலியில் உள்ள லூசியானாவில் பிறந்தார். சோனியாவின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், பல்வேறு கட்சித் தலைவர்கள் பிறந்தாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் தன் பங்குக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ தாம் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார். சோனியாவுக்கு மோடி, வழக்கமாக தவறாமல் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.