மோடி கண்ணசைத்தால் பாகிஸ்தான் ஒரு மணி நேரத்தல் காணாமல் போய்விடும் !! பொங்கி எழுந்த ராஜேந்திர பாலாஜி !!

Published : Feb 28, 2019, 09:55 AM IST
மோடி கண்ணசைத்தால் பாகிஸ்தான் ஒரு மணி நேரத்தல் காணாமல் போய்விடும் !!  பொங்கி எழுந்த ராஜேந்திர பாலாஜி !!

சுருக்கம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  பிரதமர் மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் காணாமல் போய்விடும்  என எச்சரித்தார்.

சிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி ஒரு மங்களகரமாக கூட்டணி என்றும், ஆனால் திமுக கூட்டணியோ மங்கிப்போன கூட்டணி  என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவரது முயற்சிக்கு தமிழர்களாகிய நாம் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் நம்மிடம் தொடர்ந்து வாலாட்டிக் கொண்ருக்கிறது. இத்துடன் அதை அவர்கள் றிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு மோடியைப் பத்தி தெரியாது. அவர் கண்ணசைத்தால்  பாகிஸ்தான் ஒரு மணி நேரத்தில் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், மோடி மீண்டும் பிரதமா ஆவார் என்றும்அமைச்சர் குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்