அதளப்படுத்த மதுரைக்கு வருகிறார் மோடி… எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா…தேஜ்ல் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்பு !!

Published : Jan 03, 2019, 07:58 AM IST
அதளப்படுத்த மதுரைக்கு வருகிறார் மோடி… எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா…தேஜ்ல் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்பு !!

சுருக்கம்

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் மதுரை- சென்னை இடையே அதிவேக தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏறபாடுகளை பாஜகவினர் செய்தது வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக போன்ற கடசிகள் கூட்டணி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த முறை தென் மாநிலங்களில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர் 27 ஆம் தேதி கேரளா செல்கிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு  தமிழகம் வரும் அவர் , மதுரையில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்த  மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும், சென்னை - மதுரை இடையேயான, அதிவேக, தேஜஸ் ரயில் போக்குவரத்து துவக்க விழாவும், அன்றே நடத்தப்பட உள்ளது.

இந்த விழாக்களில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையேயான,மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!