இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே  நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும்… சொல்கிறார் பிரதமர் மோடி …

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே  நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும்… சொல்கிறார் பிரதமர் மோடி …

சுருக்கம்

modi went to america for four days trip

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே  நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும்… சொல்கிறார் பிரதமர் மோடி …

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பல்வேறு பிரச்சனைகள்  தொடர்பான கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக அமெரிக்கா செல்வதாகவும்இ அவருடன் பேசும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று காலை மோடி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் இருந்து இன்று போர்ச்சுகல் செல்லும் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோனியா கோஸ்டாவைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை  அமெரிக்கா செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பயணத்தின் முக்கிய நிகழ்வாக அதிபர் டிரம்ப்பை அவர் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி அவரைச் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்த பணயத்தில் அமெரிக்க அதிபர், அமைச்சர்கள் மட்டுமன்றி அந்நாட்டு தொழிலதிபர்கள், பெரு நிறுவன அதிபர்களையும் மோடி சந்திக்க உள்ளார்.

அப்போது  இந்தியாவில் தொழில் முதலீடு செய்யுமாறு மோடி அழைப்பு விடுக்கவுள்ளார்.

மேலும் அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்துப் பேச பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி,  இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு 27ம் தேதி பிரதமர் மோடி நெதர்லாந்து செல்கிறார். இந்தியா-நெதர்லாந்தின் 70 ஆண்டு நட்பை கௌரவிக்கும் விதமாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ஊழலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..? அதிர வைக்கும் உலக நாடுகளின் ஊழல் பட்டியல்
என்.டி.ஏ கூட்டணி என்னிடம் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்காதது ஏன்? அண்ணாமலை ஆவேசம்.. கமலாலயத்தில் பஞ்சாயத்து