ஒரே வார்த்தையில் எதிர் கட்சியினருக்கு "ஓவர் டென்ஷன்" கொடுத்த மோடி..! தாறுமாறாக மாறும் கணிப்பு..!

Published : Apr 01, 2019, 01:33 PM ISTUpdated : Apr 01, 2019, 01:42 PM IST
ஒரே வார்த்தையில் எதிர் கட்சியினருக்கு "ஓவர் டென்ஷன்" கொடுத்த  மோடி..! தாறுமாறாக மாறும் கணிப்பு..!

சுருக்கம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்ற பொதுவான கருத்துக்கணிப்பு வெளிவந்த வண்ணம் உள்ளது.  

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்ற பொதுவான கருத்துக்கணிப்பு வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், பாஜக மேற்கொள்ளும் நானும் காவலர் என்ற பிரச்சார உரை நாடு முழுவதும் சில அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பிரச்சார உரையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள டல்கட்டோரா மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அப்போது பேசிய பிரதமர், நான் மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ள ஒவ்வொருத்தரும் காவலர்களே.. அவர் படித்திருந்தாலும் சரி.. படிக்காமல் இருந்தாலும் சரி .. வயதானவராக இருந்தாலும் சரி.. இளமையானவராக இருந்தாலும் சரி.. அனைவரும் காவலர்களே.." 2014 " ஆம் ஆண்டு வரை என்னை ஒரு மாநிலத்தின் முதல்வராக மட்டுமே தெரியும். ஆனால் பிரதமர் வேட்பாளராக அறிவித்த உடனே என்னை பற்றிய எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தது. நான் அதை பற்றி கவலை அடையவில்லை. அதற்கு மாறாக நாட்டை காப்பாற்றி வலிமையான நாடாக இந்தியாவை உருவெடுக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து செயல்பட்டேன்... எதிரிகளின் விமர்சனம் எனக்கு பாதகமாக அமையவில்லை.

பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதால், நான் இந்திய மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தேன்.. அது எனக்கு சாதகமாக தான் அமைந்து விட்டது.வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் குற்றசாட்டுகளை முன் வைப்பார்கள்... அவை அனைத்தும் தேர்தலோடு முடிவுக்கு வந்து விடும்" இவ்வாறு மோடி பேசினார்.

உதாரணத்திற்கு மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் அவருக்கு கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் காட்டி மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவரது பணியில் எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்தடுத்த பெரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வருகிறார் மோடி. 

அந்த வகையில் எதிரிகளின் விமர்சனம் கூட தன்னை மேலும் மேலும்  பிரபலம் அடைய வைத்துள்ளது என மோடி பிரச்சார உரையின் போது தெரிவித்தார். மோடியின் இந்த உரை எதிர்கட்சியினரை ஓவர் டென்ஷனாக்கி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!