சமாஜ்வாதி கட்சி அலுவலகம் போலீஸ் நிலையமாக செயல்படுகிறது - முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

 
Published : Feb 16, 2017, 07:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சமாஜ்வாதி கட்சி அலுவலகம் போலீஸ் நிலையமாக செயல்படுகிறது - முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் ஆட்சியில் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில்தான் போலீஸ் நிலையமே செயல்படுகிறது, யார் மீது வழக்குபோடுவது? என்பது குறித்து இங்குதான் அனுமதி அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக 72 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 67 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

பிரசாரம்

இந்நிலையில், 3-ம் கட்டமாக தேர்தலுக்காக பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஹர்தோய் நகரில் நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது-

உழைப்பேன்

கடவுள் கிருஷ்ணர் உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தாலும், குஜராத்தை கர்ம பூமியாக மாற்றினார். அதேபோலத்தான்,  நான் குஜராத் மாநிலத்தில் பிறந்து இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தால் தத்து எடுக்கப்பட்டேன்.

இது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் இந்த மண்ணில் பிறக்காவிட்டாலும், இந்த மாநிலத்தின் நலனுக்காக உழைப்பேன். இது எனது கடமை.

குண்டர்கள் இடம்

முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசின் சமாஜ்வாதி கட்சி அலுவலகங்கள் அனைத்தும் போலீஸ் நிலையங்களாக செயல்படுகின்றன. குண்டர்கள் செயல்படும் இடமாக இருக்கிறது.

கட்சி அலுவலகமா போலீஸ்நிலையமா?

கட்சி அலுவலகம் எங்கேயாவது, போலீஸ் நிலையமாக செயல்படுவதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?. இந்த மாநிலத்தில் தான் கட்சி பிரமுகர்களிடம் அனுமதி பெற்று போலீசார் வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.

இந்த மாநிலத்தில்தான், அதிக அளவு அரசியல் ரீதியான கொலைகள் நடக்கின்றன.

சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நீதி வழங்குவதில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக் கூடாது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், குண்டர்கள் ஆதிக்கத்தை ஒழிக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்