மோடி அணிந்த வேட்டிதான் அதிமுக வெற்றிக்குக் காரணம்... அதிமுகவின் வெற்றியைப் பங்குபோடும் பாஜக!

By Asianet TamilFirst Published Oct 25, 2019, 6:16 AM IST
Highlights

நாடளுமன்ற தேர்தலில் தவறான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அவர்களால் வெல்ல முடியவில்லை. திமுக கூட்டணியின் தவறான பொய்ப் பிராசாரத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர். அதனால்தான் திமுக கூட்டணியால் வெல்ல முடியவில்லை.

பிரதமர் மோடி தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சீன அதிபரை வரவேற்றது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்ற பொதுத்தேர்தல், வேலூர் தேர்தல், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 தொகுதிகள் தோல்வி அடைந்த அதிமுக, இப்போதுதான் வெற்றியை ருசித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். வேலூர் தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் பாஜகவை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுக பிரசாரம் மேற்கொண்டது.

 
இந்நிலையில் அதிமுகவின் வெற்றியில் பாஜகவும் உரிமை கொண்டாடிவருகிறது. மாமல்லபுரத்தில் சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்தது தேர்தலில்  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் இல. கணேசன் தெரிவித்திருந்தார். இதேபோல தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து சீன அதிபரை மோடி வரவேற்றது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைமையகமான கமாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.டி. ராகவன் இதை தெரிவித்தார்.

 
 “பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு தமிழகத்தில் நடத்தப்பட்டது. தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சார பாரம்பரியத்தையும் பிரதமர் மோடி பல சந்தர்பங்களில் உலகம் அறிய செய்திருக்கிறார். பிரதமர் மோடி தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சீன அதிபரை வரவேற்றது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு. நாடளுமன்ற தேர்தலில் தவறான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அவர்களால் வெல்ல முடியவில்லை. திமுக கூட்டணியின் தவறான பொய்ப் பிராசாரத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர். அதனால்தான் திமுக கூட்டணியால் வெல்ல முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இடைத்தேர்தலில் அதிமுக பணத்தை கொடுத்து வெற்றிபெற்றுள்ளதாக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் பெற்ற வெற்றி பணத்தால் கிடைத்த வெற்றியா என்பதை கே.எஸ் .அழகரி தெரிவிக்க வேண்டும். ஹரியானாவில் ,கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜகவின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து கட்சி  நிச்சயம் ஆய்வு செய்யும்” என்று கே.டி. ராகவன் தெரிவித்தார். 

click me!