இடைத் தேர்தலில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது தெரியுமா ? இல.கணேசன் சொல்லும் பகீர் காரணம் !!

Published : Oct 24, 2019, 10:34 PM IST
இடைத்  தேர்தலில் அதிமுக எப்படி  வெற்றி பெற்றது தெரியுமா ? இல.கணேசன் சொல்லும் பகீர் காரணம் !!

சுருக்கம்

பிரதமர் மோடி தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது. அதிமுகவுக்கு பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிட்டன. இந்த இடைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இந் நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. என அதிரடியாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு