அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் மோடி... அதிர்ச்சியில் தொண்டர்கள்...

By Muthurama LingamFirst Published Feb 24, 2019, 11:40 AM IST
Highlights

அ.தி.மு.க. தலைவர்கள் பி.ஜே.பி.யிடம் விலை போய்விட்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று  கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை மாட்டி தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

அ.தி.மு.க. தலைவர்கள் பி.ஜே.பி.யிடம் விலை போய்விட்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று  கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை மாட்டி தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனால் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி  அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கோரிக்கை மனு தருவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் மறைந்த பிரதமர் வாஜ்பாயிக்கு ஜெயலலிதா வணக்கம் செலுத்துவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பது அ.தி.மு.க. தலைவர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக  பிரதமர் மோடி ஜெயலலிதாவை நினைவு கூறும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில், 'ஜெயலலிதா சிறந்த நிர்வாகி மற்றும் கருணை உள்ளம் கொண்டவர். அவர் கொண்டு வந்த திட்டங்களால் ஏழைகள் பலர் பயனடைந்துள்ளனர். தமிழக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கு தலைமுறைகள் தாண்டி நினைவில் இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

click me!