மோடிக்கு தமிழிசையை யாரென்றே தெரியாது, வீட்டு வாசலில் கூட விட மாட்டங்க! பாரதிராஜா டீம் தாறுமாறு கலாய்...

First Published Apr 11, 2018, 4:26 PM IST
Highlights
Modi does not know tamilisai


தமிழிசையை மோடிக்கு யாரென்றே தெரியாது. அவரது வீட்டு வாசலில் கூட தமிழிசையை சேர்க்க மாட்டார்கள் என பாரதிராஜா டீம் தமிழிசையை தாறுமாறாக களாய்த்து தள்ளினர்.தமிழ்நாட்டுக்கான தனி கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராட்டம் வெடித்துள்ளதால், ஹோட்டல் அறையிலேயே கிரிக்கெட் வீரர்கள் இன்னும் விளையாட்டு மைதானத்துக்கு செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறினர்.

நொடிக்கு நொடி அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் பகுதிகளில்  ஆயிரக்கணக்கானோர் திரள்வதால் பதற்றம் நிலவியதால் போலீசாருக்கும் போரட்டக்கரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது அப்போது போலீசாரை இளைஞர் ஒருவர் தாக்கியதை ரஜினிகாந்த் கண்டித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.

இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி IPL போட்டிக்கு எதிராக நடந்த கண்டன போராட்டத்தில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த சண்டையை சுட்டிக்காட்டி இப்படி ஒரு ட்விட் போட்டு ரஜினிகாந்த் தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவிட்டார்.

இந்த பதிவால் கொந்தளித்த இந்நிலையில், இன்று இயக்குனர் பாரதியாஜா அறிவித்தது போல, பாரதிராஜா தலைமையில் சீமான் மற்றும் சினிமா இயக்குநர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது, தமிழகத்திற்கு வரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என்றனர்.
இந்நிலையில், பொதுமக்களைப்பாதிக்கும் அளவிற்கு..சட்டம்ஒழுங்கைப்பாதிக்கும் அளவிற்கு...

நடந்துகொள்ளும்வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது...சரியானதே.... என ரஜினியின் டிவிட்டுக்கு ஆதரவாக தமிழிசை டிவிட் போட்டுள்ளார். தமிழிசையின் ட்வீட் கருத்தால் கொந்தளித்த பாரதிராஜா டீம் பாஜக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது, எப்போதாவது தமிழர்கள் நலன் குறித்து மோடியிடம் வாய்திறந்திருக்கிறாரா? தமிழிசையை மோடிக்கு யாரென்றே தெரியாது. அவரது வீட்டு வாசலில் கூட தமிழிசையை சேர்க்க மாட்டார்கள் என களாய்த்தனர்.

click me!