கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது! மோடி கடும் கோபம்...

By sathish kFirst Published Dec 29, 2018, 8:45 PM IST
Highlights

கடன்களை தள்ளுபடி செய்வதாக பொய்யான வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி  ஓட்டு வாங்கி ஜெயித்துவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் நகரில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று, மகாராஜா சுஹேல்தேவ் நினைவாக தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் தபால் தலை வெளியிட்டதும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிறகு பேசிய பிரதமர் மோடி,  கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கட்சிகள் குறைந்த அளவிலான கடன்களையே தள்ளுபடி செய்துள்ளன என்றார்.

முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி தந்துள்ளதாக அவர் சாடினார். 6 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, வெறும் 60 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பதாகவும் மோடி விமர்சித்தார். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் நலனை காக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமென மோடி தெரிவித்தார்.
 

click me!