பிரதமர் மோடி என்னிடம் பெர்சனலாக ஆதரவு கேட்டார் !! உண்மையைப் போடுடைத்த சரத்பவார் !!

By Selvanayagam PFirst Published Dec 3, 2019, 7:56 AM IST
Highlights

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றும், அம்மாநிலத்தில் 'இணைந்து செயல்படலாம் எனவும் பிரதமர் மோடி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் தான் அதை நிராகரித்து விட்டதாகவும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிரடியாக தெரிவித்தார்.

மும்பையில்  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சரத்பவார், அரசியலில் இருவரும் இணைந்து செயல்படலாம் வாருங்கள்' என மோடி என்னை அழைத்தார். 

அதற்கு 'நமக்கிடையே உள்ள தனிப்பட்ட உறவு மிகவும் நன்றாக உள்ளது; அது என்றும் தொடரும். ஆனால் உங்களுடன் என்னால் கைகோர்த்து செயல்பட முடியாது' என தெரிவித்து விட்டேன் என கூறினார்.

மோடி அரசு எனக்கு ஜனாதிபதி பதவி வழங்க முன்வந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும்  அதேசமயம் எம்.பி.யான என் மகள் சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக தெரிவிக்கப்பட்டது என்றும் சரத்பவார் உண்மையைப் போட்டுடைத்தார்.

பிரதமர் மோடி  மீது எப்போதும் தனக்கு  தனி மரியாதை உண்டு. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 'சரத்பவாரை கடுமையாக தாக்கிப் பேச வேண்டாம்' என கட்சியினருக்கு கட்டளையிட்டார் என மோடியின் தனிப்பட்ட குண்ங்களை சிலாகித்துப் பேசினார்.

click me!