முற்றிலும் மாறுபட்ட வகையில்... 4வது ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் மோடி..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2020, 8:40 PM IST
Highlights

நான்காவது பொது முடக்கம் மாறுபட்டதாக இருக்கும். அதன் விபரம் விரைவில் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

நான்காவது பொது முடக்கம் மாறுபட்டதாக இருக்கும். அதன் விபரம் விரைவில் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது உரையில், ’’கொரோனா பாதிப்பை சமாளிக்க நாட்டில் உள்ள துறையே கைகொடுத்திருக்கிறது. இந்தியா தயாரிக்கும் இத்தகைய பொருட்களை உலக நாடுகள் கொள்முதல் செய்கின்றனர். சிறப்பு திட்டங்கள் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடையும் நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். 
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%  கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு வழங்கப்படும். ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக வலுவடைய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா இந்தியாவின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடும். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்திருக்கிறது. உலகம் என்பது ஒரே குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இல்லை. உலகுக்கு இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பரிசுதான் யோகா யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் 130 கோடி இந்தியர்களும் உறுதி இருக்க வேண்டும்.


இந்திய பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் 20 லட்சம் கோடிக்கு விசு பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும்‘’ஒரு வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலகளாவிய முடக்கம் என்பது உலக மக்கள் இதுவரை காணாதது. உலகம் இந்த ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் சின்னாபின்னமாக்கி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு  3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது. அரசுடன் போராடி உயிர்களை காக்க வேண்டும். முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் கொரோனா வைரஸுடன் போராடி உயிர் இழப்பை தவிர்க்க வேண்டும். கொரோனா  வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது .உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது. நாம் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த நான்கு மாதங்களாக குரவை விரட்ட இந்தியா பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்புக்கு பிந்தைய உலக இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.

உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழ்நிலை கொண்டு வந்துள்ளது.கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம் அருணாவை ரசிக்கும் முன்பு இந்தியாவில் பிபிஏ கிட்டுக்கள் தயாரிப்பு கிடையாது. ஆனால், இப்போது தினசரி இரண்டு லட்சம் உருவாக்குகிறோம். அடுத்த பொதுமுடக்கம் 18ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன் அதுகுறித்த விபரங்கள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

click me!