புலம் பெயர் தொழிலாளர்களிடம் மோடி ,நிர்மலா சீத்தாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கொக்கரிப்பு.!!

By T BalamurukanFirst Published May 18, 2020, 7:33 PM IST
Highlights

வலியை பகிர்வது ஒரு குற்றம் என்றால், காங்கிரஸ் இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும். இந்த உணர்ச்சியற்ற அரசாங்கத்தை பற்றி, தொழிலாளர்களின் துயரங்களை கேட்பது ஒரு குற்றம் என்றால் ராகுல்காந்தி மீண்டும் இந்த குற்றத்தை செய்வார்.


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.4வது முறையாக மே31ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசு.பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை பிறப்பித்து இருக்கிறது. மதுபானக்கூடங்கள் முதல் பஸ்போக்குவரத்து வரைக்கும் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சொந்த ஊருக்கும் போகும் வழியில் லாரி மோதியும் மாரடைப்பு ஏற்பட்டும் இறந்து போனவர்கள் சிலர். இவர்கள் எல்லாம் அடிப்படை வசதிகள் இல்லாமல் உணவு இன்றி சொந்த ஊருக்கு ஆடு மாடுகள் போன்று சரக்கு லாரிகளில் அடைக்கப்பட்டு பயணம் செய்த கொடுமை நடந்தது.கடந்த 1-ந் தேதி முதல் அவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். ஏராளமான தொழிலாளர்கள் நடை பயணமாகவும், சைக்கிள் மூலமும் ஊருக்கு செல்கின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர் வி‌ஷயத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி உத்ரபிரதேசம் மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்து, ஆறுதல் கூறி அவர்கள் சொந்த ஊருக்கு போக அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.. இந்த வி‌ஷயத்தில் ராகுல்காந்தி நாடகம் செய்கிறார் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக அவர் பேசும் போது...'
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவல நிலையை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் கோபத்தோடு பேசியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘டிராமா பாஸ்’ என்று கூறிய கருத்துக்காக அவர்களிடம் பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.உதவியில்லாமல், பசியுடன் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்கள் அரசாங்கத்திற்கு ‘டிராமேபாசி’ போல இருக்கிறாதா? தயவு செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை அவமதிக்காதீர்கள்.
இந்த நெருக்கடி நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையை பகிர்ந்துகொள்ள ராகுல்காந்தி சந்தித்துள்ளார். வலியை பகிர்வது ஒரு குற்றம் என்றால், காங்கிரஸ் இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும். இந்த உணர்ச்சியற்ற அரசாங்கத்தை பற்றி, தொழிலாளர்களின் துயரங்களை கேட்பது ஒரு குற்றம் என்றால் ராகுல்காந்தி மீண்டும் இந்த குற்றத்தை செய்வார். என்று பதிலடி கொடுத்திருக்கிறது.

click me!