
வெளிநாடுகளில் உள்ள 90 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மீட்காமல் மோடியும், அமித்ஷாவும் தன்னை முட்டாளாக்கிவிட்டதாக பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றம்சாட்டினார்.
பெங்களூரு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி கலந்து கொண்டு பேசினார். அப்போது
இந்தியாவின் 1400 பணக்காரர்களுக்கு சொந்தமான ரூ.90 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு எதிராக நான் 2009 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறேன். இந்த விவாகாரத்தில் எனக்கு உதவி செய்வதாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் என் வீடு தேடி வந்தது, கொலை வழக்கில் இருந்து அவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் என குறிப்பிட்டார்..
2014-ம் ஆண்டு பாஜக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் கருப்பு பணத்திற்கு எதிராக போராட வேண்டாம் என மோடி மற்றும் அமித்ஷா என்னை கட்டாயப்படுத்தினர் என உண்மையை அவங் அம்பலப்படுத்தினார்.
அதன் பின் தான் எனக்கு உண்மை தெரிந்தது. வெளிநாடுகளில் உள்ள ரூ.90 லட்சம் கோடியை மீட்காமல் மோடி என்னை முட்டாளாக்கி விட்டனர் என்பது புரிந்தது. அதன்பின் கட்சியிலிருந்து விலகினேன். மீண்டும் கருப்பு பணத்திற்கு எதிராக போராடி வருகிறேன். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற ஜூலை 15-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என ஜெத்மலானி கூறினார்.
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அங்குள்ள கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியாக்ளின் பெயர் பட்டியலை வெளியிட தயாராக உள்ளது. ஆனால் நமது அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை. இதனை உணர்ந்து கர்நாடக மக்கள் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு இதுவே சரியான தருணம் என ராம் ஜெம்மலானி குறிப்பிட்டார்.