12,526 கிராமங்கள்...ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி... ஒரு சிம்மாசனத்தை செதுக்கிக்கொண்டிருக்கின்றோம்! வேற லெவலுக்கு போகும் கமல்

 
Published : Apr 24, 2018, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
12,526 கிராமங்கள்...ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி... ஒரு சிம்மாசனத்தை செதுக்கிக்கொண்டிருக்கின்றோம்! வேற லெவலுக்கு போகும் கமல்

சுருக்கம்

Model Gram Panchayat

கிராம சபை கூட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் 25 ஆண்டுகளாக நம் கையில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய

கமல்ஹாசன்:

கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு இதே தேதியில் 25 ஆண்டுகள் முன்னர் இந்த சட்டம் இயற்றப்பட்டது!!
இந்த கிராமப்பஞ்சாயத்துகளுக்கு, அந்த கிராம அளவிற்கேற்ப அந்த கிராமத்தின் மக்கள் தொகைக்கேற்ப 1 முதல் 5 கோடி வரை ஒதுக்கப்படும். 12524 கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு.

அதிகாரத்தில் இருப்பவர்கள் கிராம சபையை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகத்தான் இன்று நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
இந்த கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மக்கள் நீதி மய்யம் இதை ஆரம்பித்துவைத்திருக்கின்றது.

காவிரி பிரச்சனை போன்று இன்று நாம் சந்தித்துகொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வுகளை கிராம சபைகளில் எடுக்க முடியும்!!!

ஒவ்வொரு வருடமும் கட்டாயம் 4 முறை அதாவது, ஜனவரி 26, மே1,ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்படவேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத்தான் இந்த மாதிரி கிராம சபை.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் இந்த கிராம சபைகளை நடத்த வேண்டும் என்பதை நினைவு படுத்துவதற்கு ஒரு கடிதம் மக்கள் நீதி மய்யம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை போன்ற இடங்கள் தொடங்கப்பட்டதற்கு முன்னரே இந்த கிராம சபைகள் தொடங்கப்பட்டது. கிராம சபைகளில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால் அதை சட்டசபையிலும் பாராளுமன்றங்களிலும் நிறைவேற்ற முடியும். நீதிமன்றங்களும் நமக்கு ஆதரவளிக்கும்.

தொழில் வளரவேண்டும் என்பதில் கிராமங்களுக்கும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் உயிரை பலி கொடுத்து வளர்ச்சி என்பதை எந்த கிராமமும் விரும்புவதில்லை.
ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என நாம் அனைவரும் இந்த சமூகத்தை சரி செய்யவேண்டிய பணியாளர்களே.

கிராம சபைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்திடம் சொல்லுங்கள், மக்கள் பணியாளர்களாக நாங்கள் அரசு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்வோம்.

கிராம சபைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்திடம் சொல்லுங்கள், மக்கள் பணியாளர்களாக நாங்கள் அரசு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்வோம்.

நகரங்களில் இருக்கும் வார்டுகளிலும் இது போன்ற கிராமசபைகள் தொடங்கப்படவேண்டும். நகரத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக தேர்தல் அன்று வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.

பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அரசு ஊதியம் கேரளாவில் வழங்கப்படுகிறது. அது போல தமிழகத்திலும் வழங்கப்பட மக்கள் நீதி மய்யம் முயற்சியை முன்னெடுக்கும்.

"இன்று மக்கள் சொல்வதை செவிசாய்க்கிறோம்,அதைத்தொடர்ந்து செயல்படுவோம்."

அனைவரும் வரும் மே 1 அன்று உங்கள் கிராமங்களில் இருப்பதற்க்கு முயற்சி செய்யுங்கள்.

என்னை சிலர் எறும்பு என்று சொல்கிறார்கள் ஆனால் யானையின் காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம்.

"மக்கள் அமர்வதற்கான ஒரு சிம்மாசனத்தை செதுக்கிக்கொண்டிருக்கின்றோம்."

உங்கள் தொழிலை பாதுகாத்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபடுங்கள். அரசியல் வாழ்வாதரமல்ல, அது நமது கடமை!!இந்த மாதிரி கிராமசபையை இங்கு நடத்தியற்கான காரணம், இது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.

கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 கோடி வரை நிதியானது கிராம மக்கள் தொகை, கிராம பஞ்சாயத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. 12,526 கிராமங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் கோடிகள் மூலம் பெருக்கிப் பார்த்தால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி. 25 ஆயிரம் கோடி 5 ஆண்டுகள் என்றால் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என இவ்வாறு பேசினார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!