மக்கள் மறந்துடுவாங்கன்னு நினைக்காதீங்க... காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.. எடப்பாடியாருக்கு கமல்ஹாசன் டோஸ்!

By Asianet TamilFirst Published Jun 29, 2020, 7:50 PM IST
Highlights

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்."

சாத்தன்குளம் தந்தை - மகன் மரணத்தில் குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக எடுத்து விசாரித்துவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தந்தை - மகன் ஆகியோரின் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி." என்று கமல் தெரிவித்துள்ளார்.

click me!