மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் தொடர் தோல்வியை அடுத்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மாநில நிர்வாகி ரம்யா வேணுகோபால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் தொடர் தோல்வியை அடுத்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சிறப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் சரமாரியான குற்றச்சாட்டுக்களைக் முன்வைத்து கடந்த ஜூலை மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், ரம்யா வேணுகோபால் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்த கையோடு திமுக அரசை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் 2021ம் ஆண்டில் தனது தொலைநோக்குப் பார்வையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக "குலவிளக்குத் திட்டம்" என்னும் சிறந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதா மாதம் ரூ. 1,500/-அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.
இப்போது தீய சக்தி திமுக அரசு, மேற்கூறிய அதிமுக வின் தேர்தல் வாக்குறுதியை அதாவது தமிழகத்தின் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் உதவித்தொகையாக ரூ. 1500/- என்பதை வெறும் ரூபாய் 1000/- என்று குறைத்தது மட்டுமல்லாமல், அனைத்து மகளிருக்கும் என்பதையும் சில குறிப்பிட்ட வரையறைகளுக்குட்படுத்தி, ஏகப்பட்ட குழப்பங்களுடன் இரண்டு வருட காலதாமதமதத்திற்குப்பின் இப்பொழுது தான் செயல் படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
புரட்சி தமிழர் அண்ணன் இபிஎஸ் அவர்களது தொலைநோக்குத் திட்ட வாக்குறுதியைத் தங்கள் வாக்குறுதியாக மாற்றிக்கொண்ட திமுக அரசு திறனற்ற நிர்வாகத்தினால் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தில் தேவையற்ற குழப்பங்களளையும் தாமதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து மகளிருக்கும் உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000/- அளிப்பதாகக் கூறிய தங்களது வாக்குறுதியை சரியான முறையில் நிறைவேற்றத் தெரியாமல் திக்கித்திணறும் திமுக அரசு மற்றும் அதன் தலைவர், உடனடியாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ரம்யா வேணுகோபால் கூறியுள்ளார்.