நான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதிக் கட்டத்தில் வேட்பாளர்களை அறிவித்த கமல்!

Published : Apr 28, 2019, 08:34 PM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதிக் கட்டத்தில் வேட்பாளர்களை அறிவித்த கமல்!

சுருக்கம்

இந்த 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். இந்நிலையில் இந்த 4 தொகுதிகளுக்கும் கமல்ஹாசன் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.   

தமிழகத்தில் 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சித் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கமல்ஹாசன் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ பி. சக்திவேல்  திருப்பரங்குன்றம் தொகுதியிலும் ஜி.மயில்சாமி அரவக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். எஸ்.மோகன்ராஜ் சூலூர் தொகுதியிலும் எம்.காந்தி ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.


இந்த 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். இந்நிலையில் இந்த 4 தொகுதிகளுக்கும் கமல்ஹாசன் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.   நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம்  போட்டியிட்டது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!