
பன்னீரின் தியானத்திற்குப்பின் பிளவுபட்டது அதிமுக, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என கோஷ்டியாக பிரிந்தது. பன்னீரை ஒழித்துக்கட்ட கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு பேரம் பேசினார் சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் எடப்பாடியிடம் தமிழக அரசின் கஜானாவின் கொத்து சாவியை கொடுத்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றுவிட்டார்.
எடப்பாடி அரியணை ஏறும் முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக இன்று வெளியான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வீடியோ காட்சி அம்பலமாகியுள்ளது இந்த வீடியோ அகில இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து வலைத்தளங்களில் பரவும் கருத்துக்கள் #MLAsForSale என்ற ஹேஷ்டாக் உடன் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், புறப்படும்போது 2 கோடி தருவதாக சொன்னார்கள். பிறகு அது 4 கோடி ஆகி இறுதியில் கூவத்தூர் விடுதியை அடைந்த போது 6 கோடி ஆகிவிட்டதாக கூறினார். "என்னடா இது கூடிக்கொண்டே போகிறது என்று நினைத்தேன்.. பின்னர் ஒரு நேரத்தின் அத்தனை எம்.எல்.ஏக்களுக்கும் அவ்வளவு பணம் கொடுக்க முடியாத சூழலால் தலா 2 கிலோ தங்கக்கட்டிகளாக கொடுத்து கதையை முடித்துள்ளனர்.
பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தான் வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிவிட்டேன் என்றும் அதிர்ச்சி தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் சரவணன். இதுமட்டுமல்ல கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு ஆளுக்கு பத்து கோடி கொடுக்கப்பட்டதாகவும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்குப் பணம் வரவில்லை என்றும் சரவணன் பகீர் பேச்சு வெளியாகி பெரும் விரலை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள்தான் ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் டைம்லைன்களை நிறைத்து வருகின்றன. தமிழகம் பற்றிய செய்தி ஒன்று அகில இந்திய அளவில் ட்ரெண்டானால் பெருமைப்படலாம். ஆனால் இந்த ட்ரெண்டில் நமது மானம் போகிறது என்று பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறது. அரசியல் சூதாட்டம்... வெட்கம்.... வெட்கம்... என இப்படி நெட்டிசன்கள் விதவிதமாகக் கொந்தளித்து வருகின்றனர்.
டைமஸ் நவ் மற்றும் மூன் டிவி ஸ்டிங் ஆபரேஷன் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. வெளிநாடுகளிலும் இத்தொலைக் காட்சியை பார்த்தவர்களும் பாராட்டு மழை பெய்கிறது.