
பணத்துக்கு பதில் தங்கமாக தரவும், அதிமுக எம்எல்ஏக்களிடம் சசி கோஷ்டி கூவத்தூரில் இருந்து தப்பிய எம்.எல்.ஏ. சரவணன் பேசும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைந்த அதே நாளில் இரவோடு இரவாக 11 மணிக்கு சசிகலா ஒ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை ஏற்பாடு செய்து பன்னீர் செல்வத்தை முதல்வராக்கினார் சசிகலா
பின்னர், சில நாட்களுக்கு பிறகு ஒ.பி.எஸ்சின் முதலமைச்சர் பதவி பிடுங்க பட்டது. சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் முதல் இப்போது ஒ.பி.எஸ் தரப்பில் இருக்கும் மதுசூதனன் வரை சசிகலாவிடம் கையேந்தி நின்றனர்.
சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் ஒ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்து போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார். அவருக்கு ஆதரவாக மதுசூதனன், மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோர் துணை வந்தனர்.
கூவத்தூரில் கூத்து நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சொகுசு விடுதியிலிருந்து மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தப்பி வந்து பன்னீர் கூடாரத்தில் ஐக்கியமானார். இந்நிலையில் சசிகலா அணியில் எம்.எல்.ஏ.க்களை சேர்க்க பல கோடி பேரம் பேசியது வீடியோ வெளியாகி அம்பலமாகியுள்ளது.
இந்த வீடியோவில் சொந்தஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை விமானநிலையத்தில் மடக்கியது சசிகலா கோஷ்டி என்றும் விமான நிலையத்தில் பேருந்தில் ஏற்றியபோது எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.2 கோடி என பேரம் பேசியதாகவும் பின்னர் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து ஆளுநரை சந்திக்க சென்றபோது பேரம் ரூ.4 கோடியானது என்றும் கூவத்தூர் சேர்ந்தபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி தர முன்வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த இக்கட்டான சூழலில் பல கோடி திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாக கூறியதாகவும் சரவணன் கூறியுள்ளார். இதுமட்டுமல்ல கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இரட்டையிலை சின்னத்தில் வெற்றிபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களும் எம்.எல்.ஏக்களுமான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று சரவணன் பேசிய காட்சி பதிவாகியுள்ளது.