தினகரன் வீட்டில் திடீர் ஆலோசனை...- வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் சந்திப்பு!

Asianet News Tamil  
Published : Jun 12, 2017, 07:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
தினகரன் வீட்டில் திடீர் ஆலோசனை...- வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் சந்திப்பு!

சுருக்கம்

Dinakaran Sudden meeting with his supporters

தினகரன் தனது ஆதரவாளர்களும் தீவிர விசுவாசிகளான தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் தனது பெசன்ட் நகர் இல்லத்தில் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகாருக்கு சென்று நிபந்தனை ஜாமினில் வெளிவந்த தினகரன் தனது அடுத்த கட்ட அதிரடிக்கு தயாராகிவிட்டார்.

திகாரில் இருந்து வந்த தினகரனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள் சென்னை திரும்பிய போதும் விமான நிலையத்தில் தினகரனை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

தினகரன் சிறை செல்வதற்கு முன்னாள் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக பேட்டியளித்துவந்த எடப்பாடி அரசு அமைச்சர்களுக்கு சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், கட்சி பணிகளில் மீண்டும் ஈடுபடுவேன் என்றும் வாயடைக்க வைத்தார்.  

கடந்த  3-ந்தேதியில் இருந்து ஆதரவாளர்களுடன் பெசன்ட்நகர்  வீட்டில் தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் திரண்டு சென்று தினகரனை சந்தித்தனர்.

முன்னாள் அமைச்சர்களான தோப்பு வெங்கடா சலம், செந்தில்பாலாஜி, பழனி யப்பன், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட 33 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தினகரனின் ஆதரவாளர்களும் தீவிர விசுவாசிகளான தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏக்கள் தினகரனின் பெசன்ட் நகர் வீட்டில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!