அரசியலில் திருப்புமுனை..! போட்டுடைத்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா..!

By ezhil mozhiFirst Published Jun 8, 2019, 12:10 PM IST
Highlights

ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்கவேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மதுரையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார்

ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்கவேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மதுரையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அப்போது பேசிய அவர், "தினகரன் என்ற மாயை தற்போது இல்லை என்பது தெரிந்துவிட்டது.. அதிமுகவிற்கு ஒரே ஒரு தலைமை தேவை...."ஒரே தலைமை உருவாக்குவது" பற்றி அதிமுகவின் பொதுக்குழுவில் வலியுறுத்துவோம். இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்எல்ஏக்கள் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வில்லை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை.. ஒற்றை தலைமையில் கட்டுப்பாட்டுடன் கட்சியை கொண்டு செல்ல வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.

எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ-வான ராஜன் செல்லப்பா.. திடீரென இவ்வாறு  சில கருத்துக்களை அதிரடியாக முன்வைத்துள்ளது பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிற்கு ஒரே தலைமை வேண்டும் என்றால்..? அது பன்னீர் செல்வமா? அல்லது  எடப்பாடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் அம்மாவால், அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தான் தலைமை ஏற்க வேண்டும் என ராஜன் செல்லப்பா குறிப்பிட்டு  உள்ளதை வைத்து பார்க்கும் போது, ஒரு வேளை துணை முதல்வர் பன்னீர் செல்வதை தான் குறிப்பிடுகிறாரா ? என்ற பாணியில் உள்ளது. 

இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், இரண்டு தலைமை இருக்கும் போது,  எந்த ஒரு முடிவும் விரைவாக எடுக்க முடியவில்லை என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்து உள்ளார். மொத்தத்தில் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கள், அரசியலால் ஒரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

click me!