
ஒ.பி.எஸ் தரப்பினர் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியும் ஒ.பி.எஸ் தரப்பு அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே இரு தரப்பினருக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தினகரனை கட்சியில் ஒதுக்குவதாக அமைச்சர்கள் மத்தியில் முடிவு செய்யப்பட்டது.
தினகரனை நீக்கியது குறித்து செய்தியாளர்கள் ஒ.பி.எஸ்ஸிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஒ.பி.எஸ் தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என பதிலளித்தார்.
இதை கிண்டல் செய்யும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார், கட்சி நலன் கருதியே தினகரனை விலக்கினோம் என்றும் ஒ.பி.எஸ் நிர்பந்தத்தால் விலக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தம்பிதுரை பேசுகையில், எடப்படியே முதலமைச்சர் என தெரவித்தார்.
தம்பிதுரை, ஜெயக்குமார் இவ்வாறு கூறியதை ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
சுயலாபத்திற்காக யாரும் யோசிக்க கூடாது.
ஒ.பி.எஸ் தரப்பினர் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இரு அணிகளும் குழு அமைத்து பேச வேண்டும்.
அனைத்தையும் மறந்து ஒற்றுமையுடன் சேர்ந்து இரட்டை இலையை மீட்க வேண்டும்.
யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நீதி விசாரணை கேட்டால் பரிந்துரை செய்வோம்.
ஜெயக்குமார் கூறிய வார்த்தைகளுக்கு அவர்க்தான் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.