பதவிக்காக இருப்பவர்களே திமுகவில் அதிகம்...! எங்கள் பலத்தை விரைவில் காண்பிப்போம்...! மு.க.அழகிரி பரபரப்பு பேச்சு

 
Published : Jun 10, 2018, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
பதவிக்காக இருப்பவர்களே திமுகவில் அதிகம்...! எங்கள் பலத்தை விரைவில் காண்பிப்போம்...! மு.க.அழகிரி பரபரப்பு பேச்சு

சுருக்கம்

M.K.Azhagiri Speech at the wedding ceremony

மு.க. அழகிரியின் விசுவாசுகளில் முதன்மையானவரும், மதுரையில் முன்னாள் துணை வேந்தருமான மன்னனின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த
திருமண விழாவுக்கு மு.க.அழகிரி வருகை தந்தார். இதனையொட்டி, மதுரை மாநகர் எங்கும் மு.க.அழகிரியை வரவேற்று பேனர், போஸ்டர், தோரணம் என
வைக்கப்பட்டது.

மதுரை வேலம்மாள் மகாலில் பிரம்மாண்டமாக நடந்த திருமணவிழாவில், தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி.சித்தன், திரைப்பட இயக்குநர் பாலா,
விஜயகுமார், சமுத்திரக்கனி, சூரி, ஆர்.கே.சுரேஷ், பாஜக அரசகுமார் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இன்று காலை 11 மணிக்கு மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் திருமண மண்டபத்துக்கு வந்தனர். மணமேடைக்கு
வந்த அழகிரி தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்க திருமணம் நடைபெற்றது.

மணமக்களை வாழ்த்தி பேச வந்த மு.க.அழகிரி, என்னுடன் இருப்பவர்களில் முக்கியமானவர் மன்னன். இவர் பதவிக்காக என்னுடன் இருந்ததில்லை. இப்பொழுது திமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காக இருப்பவர்கள் என்றார். வருகிறதேர்தலில் எங்கள் பலம் என்னவென்று எல்லோருக்கும் காண்பிப்போம்

பல இடைத்தேர்தர்களில் திமுக வெற்றி பெற பாடுபட்டவர் மன்னன். அவருடைய இனிஷியல் பி.எம். அப்படி என்றால் பிரைம் மினிஸ்டர் ஆகும் தகுதி பெற்றவர்.
ஆனால், அவர் அதற்கெல்லாம் ஆசைப்பட்டதில்லை. அவர். டி.எம்.தான். முன்னாள் டெபுடி மேயர். மணமக்கள் மன்னன்போல் வாழ வேண்டும் என
வாழ்த்துகிறேன் என்று மு.க.அழகிரி வாழ்த்தினார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்