அப்பா, அம்மா-வை பார்த்துவிட்டுப்போன மோடிக்கு நன்றி!! மீண்டும் களத்தில் மு.க.அழகிரி!!!

 
Published : Nov 07, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
அப்பா, அம்மா-வை பார்த்துவிட்டுப்போன மோடிக்கு நன்றி!! மீண்டும் களத்தில் மு.க.அழகிரி!!!

சுருக்கம்

m.k.alagiri thanks to modi

திமுக தலைவர் கருணாநிதியையும், தயாளு அம்மாவையும் பார்த்து நலம் விசாரித்துச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின்  பவள விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் கரங்களை இறுக்கப்பற்றிக் கொண்ட மோடி, டெல்லி வந்து தம்முடைய வீட்டில் தங்கி ஓய்வெடுக்குமாறு அழைப்புவிடுத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

தொடர்ந்து கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவையும் சந்தித்த மோடி அவரிடமும் நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, தனது தந்தையையும், தாயையும் பார்த்து நலம் விசாரித்துச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் அழைத்த மு.க.அழகிரி, பிரதமர் மோடிக்கு இதற்காக மிகுந்த நன்றி  தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்னாரும்  இதை பிரதமரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி, தற்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்திருப்பதின் மூலம் மீண்டும் அரசியல் களத்தில் குதிப்பாரா?

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!