தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை சென்றார்.
விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனி நோக்கி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், செல்லும் வழியில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த ஊழியரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தீ விபத்து மற்றும் பிற விபத்து குறித்த பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்த அவர், அங்கு வசிப்பவர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன், குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது நேற்று இரவு ஆண்டிபட்டி காவல் நிலைய குடியிருப்பில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து விட்டு திரும்பும் போது அந்தப் பகுதியில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் மு.க.ஸ்டாலின் மிக அருகில் வந்தபோது, ‘ஐயா எங்க ஊர்ல அடிக்கடி கரண்ட் கட்டாகுதுங்கய்யா. ஏதாவது பார்த்து செய்யுங்கய்யா’ என்று கூறினார். அப்போது அருகில் இருந்த பெண்மணி ஒருவர், ‘ஆமாமா அடிக்கடி கரண்ட் கட் பண்ணி விட்டுடுறாங்க, காலையில இருந்து’ என்று சொல்லும்போது அதிகாரிகள் வீடியோ எடுப்பதைத் தடுத்துவிட்டார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எங்க ஊர்ல கரண்ட் ரொம்ப கட்டாகுதுங்கய்யா.. நேருக்கு நேராக கூறிய இளைஞரால் அதிர்ந்து போன மு.க ஸ்டாலின் - வைரல் வீடியோ ! pic.twitter.com/xkqMjS7h06
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு தலைமையில் பாதுகாப்பு படையுடன் நடந்து வந்த தமிழக முதலமைச்சரை நேருக்கு நேர் பார்த்து தமிழகத்தின் உண்மைநிலையை எடுத்துரைத்த அந்த இளைஞருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘ஆண்டிபட்டின்னாலே கெத்துதான்’ என்கிற வாசகத்தோடு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!