எங்கள் யாத்திரையை கண்டு அஞ்சு நடுங்கும் ஸ்டாலின்... திமுகவை கிழித்து தொங்கவிடும் எல்.முருகன்..!

By vinoth kumarFirst Published Nov 4, 2020, 12:46 PM IST
Highlights

இந்த யாத்திரையில் பாஜக தேசிய நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், முக்கியமான மாநிலத்தின் முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். நிறைவு நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள உள்ளார். இந்த யாத்திரை தமிழகத்தின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்.

தமிழகத்தில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக பாஜக சார்பில், வருகிற 6-ம் தேதி காலை 10 மணியளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரை முருகனின் ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது. இறுதியாக டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

இந்த யாத்திரையில் பாஜக தேசிய நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், முக்கியமான மாநிலத்தின் முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். நிறைவு நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள உள்ளார். இந்த யாத்திரை தமிழகத்தின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். எங்கள் யாத்திரையை கண்டு, ஸ்டாலின் நடுக்கத்தோடு உள்ளார். யாத்திரையை எதிர்ப்போர், கலவரம் உண்டாக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக காவல் துறை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக என்றைக்கும் பிரச்சனை ஏற்படுத்தியது இல்லை. பாஜக தொண்டர்கள் ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள். ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறேன். அவர் அரசியலுக்கு வந்தால், தமிழக பாஜக வரவேற்கும். யாத்திரையின் போது லட்சக்கணக்கானோர் பாஜகவில் இணைய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

click me!