பட்டாவை காட்டி பங்கமாக மாட்டிக் கொண்ட மு.க.ஸ்டாலின்... அம்பலமானது ரகசியம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 18, 2019, 6:22 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முரசொலி இடத்தின் பட்டாவில் அது அரசாங்கம் இனாமாக வழங்கிய இடம் எனத் தெரிய வந்துள்ளதாக கருத்துக்கள் கிளம்பியுள்ளன. 

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முரசொலி இடத்தின் பட்டாவில் அது அரசாங்கம் இனாமாக வழங்கிய இடம் எனத் தெரிய வந்துள்ளதாக கருத்துக்கள் கிளம்பியுள்ளன. 

தூத்துக்குடியில் அசுரன் படம் பார்த்து விட்டு, ’பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்’ எனப்பாராட்டி இருந்தார் மு.க.ஸ்டாலின்.  அதற்கு பதிலளித்து இருந்த ராமதாஸ், ’பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் முரசொலி நிலம் குறித்து விளக்கமளித்துள்ள மு.க.ஸ்டாலின், ‘’நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால்,  அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது  “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.

அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை’’ எனத் தெரிவித்ததுடன் பட்டாவையும் வெளியிட்டு இருந்தார். இந்த பட்டாவை பார்த்தவர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். அதாவது, ‘’பஞ்சமி நிலம் கொடுத்தது  1892 ஆம் வருஷம். 1985 ஆம் ஆண்டு பட்டாவைக் காட்டி, அது பஞ்சமி நிலம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.  இந்தப் பட்டாவில் 6வது காலத்தில் "ர" என்று போடப்பட்டிருக்கிறது. அந்த "ர" என்பதன் அர்த்தம் ரயத்துவாரி நிலம். அதாவது, அரசாங்கம் அல்லது அரசர் இனாமாக வழங்கிய இடம் என்பது தான் அதன் அர்த்தம்’’என கருத்துக் கூறி வருகின்றனர்.  

click me!