மு.க.ஸ்டாலின்- செந்திபாலாஜி வெற்றி... வேண்டுதலை நிறைவேற்ற நடத்துனர் தீக்குளித்து தற்கொலை..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2021, 4:08 PM IST
Highlights

தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகிவிட்டாலும் உயிரை மாய்த்துக் கொள்வேன் என வேண்டிக் கொண்டுள்ளார்.

முக.ஸ்டாலின் முதல்வராக வேண்டும், செந்தில்பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்ற தனது வேண்டுதல் நிறைவேறியதால், கடிதம் எழுதி வைத்துவிட்டு கோவில் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர் உலகநாதன்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை சேர்ந்தவர் உலக நாதன். இவர் திமுகவின் தீவிர தொண்டராக இருந்து வந்துள்ளார். அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகிவிட்டாலும் உயிரை மாய்த்துக் கொள்வேன் என வேண்டிக் கொண்டுள்ளார்.

அவர் வேண்டிக் கொண்டது போலவே, ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். செந்தில் பாலாஜியும் மின்சாரத்துறை அமைச்சர் ஆகிவிட்டார். ஊரடங்கால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வேண்டுதலை நிறைவேற்றாமல் பொறுமை காத்து வந்த உலகநாதன், இன்று மணிமங்கலம் புது காளியம்மன் கோவிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவதாக கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவலறிந்து வந்த லாலா பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தின் மூலமாக தான், உலகநாதன் இந்த காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட உலக நாதனுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

click me!