
கலைஞர் அரங்கம் கண்ணீர் அரங்கமாக திமுக தலைவரின் மறைவுக்குப் பிறகான கட்சியின் முதல் செயற்குழுக் கூட்டம் இன்று சற்று நேரத்திற்கு முன்பாக கூடியது.
திமுக எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை; திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்தபின் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள்குறித்து செயற்குழுவில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
அதை மேலும் வலுவாக்குகிறது செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. பொதுவாக திமுக செயற்குழுக் கூட்டம் என்றால் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என்று சில 100 அல்லது 150 பேரே பங்கெடுப்பார்கள். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மாவட்டத்துக்கு இருவர் வீதம் 65 மாவட்டங்களுக்கு 130 பேர், மாநில, நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என்று சில நூறு பேர் செயற்குழுவுக்கு பங்கேற்ப்பார்கள்.
ஆனால், கலைஞர் மறைவுக்குப் பின் நடக்கும் இந்தச் செயற்குழுவுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வரை அழைக்கப்பட்டிருக்கிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட துணைச் செயலாளர்கள், கட்சியின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் என்று சுமார் ஆயிரம் பேரைத் தாண்டியுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்திற்கு சரியாக 9:40 க்கு ஸ்டாலின் அறிவாலயத்திற்கு வந்ததால் திமுக செயற்குழு கூட்டம் களைகட்டியது.