வேல் பிடித்து ஓட்டுக்காக நாடகமாடுகிறார் மு.க.ஸ்டாலின்... குத்திக் காட்டும் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Mar 29, 2021, 3:45 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை சொல்லி வருகிறார் என்று கூறிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஸ்டாலின் ஆத்திகரா? அல்லது நாத்திகரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை சொல்லி வருகிறார் என்று கூறிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஸ்டாலின் ஆத்திகரா? அல்லது நாத்திகரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சி.டி.ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை சொல்லி வருகிறார்.  ஸ்டாலின் ஆத்திகரா? அல்லது நாத்திகரா? இந்து கடவுள்களை மட்டுமே ஸ்டாலின் இழிவுபடுத்துகிறார். கடவுள் இல்லை என சொல்லும் ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் வேலோடு செல்கிறார். வேல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நாடகமாடி வருகிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு, வேலை இழப்பு போன்றவை இருந்தன. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு தடை ஆகியவை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டவை. தமிழ்நாடு முன்னேற நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி என்ற டபுள் என்ஜின் தேவை. கட்டபஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள். முதலமைச்சர் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று பேசுவது திமுகவின் டிஎன்ஏ. கோவை தெற்கு தொகுதியில் பீப்பிள் ஹீரோவான வானதி சீனிவாசனுக்கும், பிலிம் ஹீரோ கமல்ஹாசனுக்கும் போட்டி நிலவுகிறது. பீப்பிள் ஹீரோ வேண்டுமென்றால் மண்ணின் மகள் வானதி சீனிவாசனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்ற ராகுல்காந்தியின் கருத்து தவறானது. நரேந்திர மோடி 6 லட்சம் கோடி நலத்திட்டங்களை தந்துள்ளார். ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார் ராகுல் காந்தி.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தமிழ்நாட்டை நேசிக்கிறது. மதுரை எஸ்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நில ஆர்ஜிதம் முடிந்த பின்னர் துவக்கப்படும். 2016 தேர்தலில் கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சிக்கு வருமென்றது. ஆனால் நடந்தது என்ன? களநிலவரத்திற்கும், கருத்துக்கணிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம் கருத்துக்கணிப்புகளை சில நேரங்களில் மட்டுமே நம்ப முடியும்”என அவர் தெரிவித்தார்.

click me!