உலக மகளிர் தினத்தன்று தி.மு.க.வை குறிப்பாக ஸ்டாலினையும், துரைமுருகனையும் பிரேமலதா விமர்சித்து தள்ளியதை அடுத்த தேர்தல் சீசன் வரை யாரும் மறக்க முடியாது. அ.தி.மு.க. கூடாரத்தில் தே.மு.தி.க. செட்டிலாகிவிட்ட நிலையில், தன் தோழமைக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களிடம் சில ரகசியங்களை உடைத்துப் பேசியிருக்கிறார்.
உலக மகளிர் தினத்தன்று தி.மு.க.வை குறிப்பாக ஸ்டாலினையும், துரைமுருகனையும் பிரேமலதா விமர்சித்து தள்ளியதை அடுத்த தேர்தல் சீசன் வரை யாரும் மறக்க முடியாது. அ.தி.மு.க. கூடாரத்தில் தே.மு.தி.க. செட்டிலாகிவிட்ட நிலையில், தன் தோழமைக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களிடம் சில ரகசியங்களை உடைத்துப் பேசியிருக்கிறார்.
அப்படி என்ன பேசினார் ஸ்டாலின்?.... “விஜயகாந்தை நான் சந்திக்கப்போனதில் எள் அளவும் அரசியல் இல்லை. அவருக்கு எங்க தலைவர் மேலே பெரிய மரியாதை, பாசம் இருந்துச்சு. தலைவர் இறந்தன்னைக்கு அமெரிக்காவில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ மெசேஜில் அவர் குலுங்கி குலுங்கி அழுததை பார்த்து கண் கலங்கியவன் நான். அந்த அன்பின் அடிப்படையில், ரெண்டாவது முறை அவர் அமெரிக்கா சென்று வந்ததும், நேரில் சென்று விசாரிக்க நினைச்சேன். தலைவர் மருத்துவமனையில் இருக்குறப்ப ரெண்டு முறை என்னிடம் போனில் அவர் விசாரித்தார், இதற்கு பதில் மரியாதை செய்ய நினைத்தேன்.
ரஜினிகாந்த் விஜயகாந்தை பார்த்துவிட்டு சென்றதும், ‘நான் வரலாமா?’ன்னு சுதீஷிடம் கேட்டேன். அந்த நேரத்துல அவங்க அ.தி.மு.க.விடம் கூட்டணி பேசிட்டு இருந்த நேரம். வரச்சொல்வது கஷ்டம்தான்ன்னு நினைச்சேன். ஆனால் சுதீஷோ ‘உடனே வாங்க’ன்னு சொல்லி ஆச்சரியப்படுத்தினார். சகோதரர் விஜயகாந்தை அவருடைய வீட்டில் சந்திச்சு, நட்பா பேசிட்டு கிளம்புறப்ப சுதீஷ் என்னிடம் ‘உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்’ன்னு சொல்லி பக்கத்தில் இருந்த தனி அறைக்கு அழைத்தார். நான் ‘என்ன விஷயம்?’ன்னு கேட்டதும், ’தேர்தல் விஷயம்’ன்னு சொன்னார். உடனே நான், உடல் நலம் விசாரிக்க வந்த இடத்தில் அரசியல் பேசுவது நன்றாக இருக்காதுன்னு நினைச்சு ‘இதை அப்புறம் பார்த்துக்கலாம்.’ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
நான் இப்படி நாகரிகமாக தவிர்த்ததை அந்த சைடு எதிர்பார்க்கலை, அதிர்ச்சி மற்றும் கோபம் அடைஞ்சிருக்காங்க. அதன் வெளிப்பாடாக ‘தி.மு.க. ஸ்டாலின் கேப்டனை பார்க்க வந்தப்ப அரசியல் பேச்சுவார்த்தை நடந்துச்சு.’ன்னு ஒரு பொய்யை வெளியிட்டார். அதுக்கு ரியாக்ட் பண்ண நான் விரும்பலை. அதன் பிறகும் தே.மு.தி.க. தரப்பிலிருந்து எங்ககிட்ட கூட்டணி பேசினாங்க. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வாங்கியதை விட ஒரு தொகுதியாவது இங்கே வாங்கணும் அப்படிங்கிறது அவங்களோட வேட்கையா இருந்துச்சு. மேலும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத சில கோரிக்கைகளையும் வெச்சாங்க! அதனால் அவர்களுடனான கூட்டணியை தவிர்த்தோம்.
(இந்த இடத்தில் சில தோழமை தலைவர்கள் ‘அது என்னங்க தளபதி? நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம்? பணம் எதிர்பார்த்தாங்களா?’ என்று மீண்டும் மீண்டும் கேட்க, ஸ்டாலின் சிரித்து மழுப்பினாரே தவிர பதில் சொல்லவில்லை.) நாம தயாரில்லைன்னு தெரிஞ்சதும் முழுக்க முழுக்க அ.தி.மு.க. பக்கமே பேசிட்டு இருந்த தே.மு.தி.க. திடீரென அங்கே பிரச்னையாகி, மீண்டும் நம்ம பக்கம் திரும்பினாங்க. நான் ஊரில் இல்லாத நேரத்தில் அண்ணன் துரைமுருகனை சந்திச்சு பேசினாங்க. நான் விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில் அரசியல் பேசாத போது அதை மறைத்து ‘அரசியல் பேசினோம்’ என்று பிரேமலதா சொன்னது தப்பில்லையாம், அநாகரிகமில்லையாம்.
ஆனால் இவர்கள் சீட் கேட்டு வந்ததை துரைமுருகன் வெளியே சொன்னது மட்டும் அநாகரிகமாம்! என்ன லாஜிக் இது. இப்போ ஒரு வழியா அந்த கூட்டணியில (அ.தி.மு.க.) போயி சேர்ந்துட்டாங்க. அடிப்படை உண்மையை கூட காப்பாற்ற முடியாத, காப்பாற்ற விரும்பாத இந்த அம்மாவால் அ.தி.மு.க. நிச்சயம் பெரியளவில் அவஸ்தைப்படும். நாம நல்ல வேளையா தப்பிச்சுட்டோம்.” என்று சொல்லி மைக்கை கீழே வைத்தபோது, செமத்தியாக கைதட்டி ஆமோதித்தார்களாம் தோழமை அமைப்பினர். ஸ்டாலின் பேசிய இந்த பேச்சு விபரங்கள் சிலர் மூலமாக தே.மு.தி.க.வின் கவனத்துக்கு வர, அடுத்த அதிரடிக்கு தயாராகிறாராம் பிரேமா. இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் வேறு ஐக்கியமாகிவிட்டதால் ஸ்டாலின், தி.மு.க.வுக்கு எதிரான பிரேமாவின் வீச்சு வேற லெவலில்தான் இருக்கும்! என்கிறார்கள் அவரது கட்சியினர். ஆஹாங்!.................