திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவு...!

By vinoth kumarFirst Published Mar 11, 2019, 12:38 PM IST
Highlights

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் 18 தொகுதிகளுடன் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முறையிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் 18 தொகுதிகளுடன் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முறையிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மக்களவை மற்றும் தமிழக இடைத்தேர்தல் தொகுதிக்கு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்திருந்தார். 

இதனையடுத்து இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தொகுதிவாரியாக பிரச்சார வியூகம், வாக்குச்சாவடி முகவர் நிலையில் இருந்து ஒவ்வொரு கட்டத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்து, இணக்கமாக பணியாற்றுவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

* 18 தொகுதிகளுடன் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முறையிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

* அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும்.

* 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

click me!