கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்... வீடியோ ஆதாரத்தை காட்டி நறுக்கென பிடித்துக் கொண்ட அதிமுக- பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Jan 16, 2022, 2:55 PM IST
Highlights

21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசை கொடுத்தது திமுக அரசாங்கம். பொங்கல் முடிந்தும் இன்னும் பலருக்கு அந்த பொருட்கள் போய் சேரவில்லை. 
 

6-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு வரும் முதல் பொங்கல் திருவிழா இது. அதனால், தமிழ்நாடு அரசு சார்பில் இந்தாண்டு பெரிய அளவில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்தார்கள் குடும்பத் தலைவிகள். ஆனால், 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசை கொடுத்தது திமுக அரசாங்கம். பொங்கல் முடிந்தும் இன்னும் பலருக்கு அந்த பொருட்கள் போய் சேரவில்லை. 

அந்தத் தொகுப்பில் புளியில் பல்லி இருந்தது. மாவில் பூச்சிகள் இருந்தன என பல புகார்கள் கூறப்பட்டன.  கன்னியாகுமரியில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான வெல்லத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி சிறிஞ்ச் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காலாவதியான பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கொள்முதல் செய்த அந்த நிர்வாகிகள் பல கோடிகளை பெற்றுக்கொண்டு தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 
 அரசுக்கு சொந்த கட்சி தலைவர்கள் செய்த சம்பவம் சிறப்பு என திமுகவினரே கொதித்து வருகின்றனர்.

துரும்பு கிடைத்தாலே அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் திமுக அரசை காய்ச்சி எடுத்து விடுவார்கள். பல்லியே கிடைத்துவிட்டது. சும்மா விடுவார்களா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியோ கையில் உருகிய வெல்லத்துடன் வந்து பிரஸ்மீட் கொடுக்க, ஓபிஎஸ் அறிக்கைகளாக விட்டு தள்ளினார். இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க தமிழக வணிகர்களும் கோபமடைந்தனர்.

காரணம் பொங்கல் பொருட்களில் பாதிக்கு மேல் வடமாநிலங்களிலிருந்து பெறப்பட்டவை. தமிழக வணிகர்களைப் புறக்கணித்து இந்தி மாநில வணிகர்களை வாழ வைக்கிறதா என கொந்தளித்தனர். ஆனால் உண்மையில் அனைத்து மாநிலங்களிலிருந்துமே பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் பொங்கலுக்கான பொருட்களை அரசு வாங்கியுள்ளது. அதேபோல துவரம் பருப்பு, பாசிப்பருப்புகளை சரவணா ஸ்டோரில் கொள்முதல் செய்திருக்கிறது. இவ்வாறு அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்துகட்டியே வாங்கியிருக்கிறார்கள்.

டெண்டரில் யார் குறைந்த விலைக்கு கேட்டார்களோ அவர்களுக்கு கொடுத்தோம் இதில் என்ன தவறு என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் அப்படியே ஆஃப் ஆனது. ஆனாலும் அந்த தரமற்ற பொருட்கள் விவகாரம் தான் விஸ்வரூபம் எடுத்தது. அரசு எந்தவிதமான விளக்கமும் சொல்ல முடியாமல் தவித்தது. இதனால் கடும் அப்செட்டான முதல்வர் ஸ்டாலின் உடனே களமிறங்கினார். அனைத்து பொருட்களும் தரமாக கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஆட்சியர்கள் என அனைவருக்கும் உத்தரவிட்டார். அதற்கு வெள்ளோட்டமாக அடுத்த நாளே ராயபுரத்திலுள்ள ஒரு ரேஷன் கடையில் திடீரென ஆய்வும் மேற்கொண்டார்.

இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் மேலும் விமர்சனங்களே எழுந்தன. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற முதல்வார் ஸ்டாலின் இந்த திட்டம் சொதப்பியது ஏன்? அதிகாரிகள் இதை கவனிக்காதது ஏன்? எங்கே தவறு நடந்தது என்று முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்த கூறியுள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நாம் வழங்கும் பொருட்களை வைத்து பொங்கல் கொண்டாட முடியாத நிலை இருந்தால் என்ன அர்த்தம்? எனக்கு உடனடியாக ரிப்போர்ட் வேண்டும் என அதிகாரிகளுக்கு கோபத்தில் ஆணையிட்டுள்ளார். 

click me!