திமுகவில் கடைசி கட்ட க்ளைமேக்ஸ்... பொங்கியெழுந்த சீனியர்... பொசுக்கென்று மடங்கிய மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Apr 4, 2020, 5:06 PM IST
Highlights

கட்சியில் சீனியர் என்ற மரியாதை கூட இல்லை என்றால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை? 

திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மரணமடைந்ததை தொடர்ந்து அந்தப்பதவி பதவி காலியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 29ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக அறிவித்த பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஐ.பெரியசாமி மற்றும் துரைமுருகன் இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கட்சியின் சீனியாரிட்டி படி திமுக பொருளாளர் ஆக இருக்கும் துரைமுருகனை திமுக பொதுச்செயலாளராக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதில், எந்த மாற்றமும் கிடையாது. மு.க.ஸ்டாலினால்  ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்த முடியுமே தவிர, துரைமுருகனை சமாதானப்படுத்துவது முடியாத காரியம் என்கிறது திமுக வட்டாரம்.

ஆகையால், துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்து விட்டது திமுக. இந்நிலையில் துரைமுருகன் வகித்து வரும் பொருளாளர் பதவியை யாருக்கு வழங்கலாம் என திமுக தலைமை ஆலோசித்த போது தற்போது தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த பட்டியல் சமூக ஆணையத் தலைவராக இருந்த எல். முருகனை நியமித்துள்ளது. இது திமுக கட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் சமூக நீதி பேசும் திமுக இதுவரை செய்யாத ஒன்றை பாஜக செய்துள்ளதாகவும், உண்மையான சமூக நீதி கட்சி பாஜகதான்.
 
எங்கே திமுகவில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராக கூட வேண்டாம். இரண்டாம் கட்ட பதவிக்கு வர முடியுமா? என திமுகவை எதிர்த்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் அ.ராசாவை பொருளாளராக நியமிக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து ஆலோசித்திருக்கிறார். 

இந்த தகவல் அறிந்த டி.ஆர்.பாலு கடும் அப்செட் ஆகி என்னை வைத்து ஸ்டாலின் காமெடி செய்கிறாரா? என கோபத்தில் முக்கிய தலைவர்களிடம் கொந்தளித்துள்ளார். தனக்குத்தான் பொருளாளர் பதவி என உறுதியாகக் கிடைக்கும் என பொறுமையாக இருக்கிறேன். கட்சியில் சீனியர் என்ற மரியாதை கூட இல்லை என்றால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை? பொருளாளர் பதவிக்கு என்னை தேர்வு செய்யவில்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என் மகனுக்கு சீட் வேண்டாம் என டி.ஆர்.பாலு குதிக்க இறுதியில் சீனியாரிட்டி படியே பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு வழங்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!