தமிழகத்தின் முக்கியமான ஐடி ரெய்டுகள்! லிஸ்டு போட்டு ஒப்பித்த செயல் தல!

 
Published : Nov 09, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
தமிழகத்தின் முக்கியமான ஐடி ரெய்டுகள்! லிஸ்டு போட்டு ஒப்பித்த செயல் தல!

சுருக்கம்

M.K. Stalin Criticism

ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகள் போலவே தற்போதைய சோதனையும் நடத்தப்பட்டு வருகிறதா? என்றும், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை கன்னித்தீவு கதை போன்றே உள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை வரை சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தன்னிடம் பெரிய பட்டியலே உள்ளது என்று குறிப்பிட்டார்.

சட்டசபை தேர்தலின் போது ரூ.570 கோடி சிக்கிய பிரச்னை, நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு, சைதை துரைசாமி வீட்டில் நடந்த ரெய்டு, தமிழக தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு கோட்டையில் நடந்த ரெய்டு, மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டு, விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நிற்க காரணமான ரூ.89 கோடி கிடைக்க நடந்த ரெய்டு, கான்ட்ராக்டர் சுப்ரமணியம் வீட்டில் நடந்த ரெய்டு, குட்கா குடோனில் நடந்த ரெய்டு என என்னிடம் நீண்ட பட்டியல் உள்ளது என்றார்.

இந்த சோதனை, ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனை போலவா? ஏற்கனவே நடத்தப்பட்ட ரெய்டுகள் முடிவு என்ன என்பது தெரியவில்லை என்றார். அந்த அடிப்படையில் இது நடக்கிறதா? என்றும், வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கை கன்னித்தீவு போன்று வருமான வரித்துறையின் சோதனை நடக்கிறதா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!