ஸ்டாலின் மதுரைக்கு செய்த துரோகம்! பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க!அண்ணாமலை.!

By vinoth kumar  |  First Published May 31, 2023, 2:02 PM IST

 மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லா? விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என்று தெரியவில்லை. 


கைது செய்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மல்யுத்த வீரர்கள் கூறுவது ஏற்புடையதல்ல என அண்ணாமலை கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை;- கைது செய்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மல்யுத்த வீரர்கள் கூறுவது ஏற்புடையதல்ல. கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் பாலியல் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லா? விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என்று தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் கைது செய்தால் தான் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்வோம் என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அதிரடி காட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்.! நாளை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்? என்ன காரணம் தெரியுமா?

உலகளவில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடு இந்தியா தான். காரணம் பிரதமர் மோடி தான். முதல்வர் ஸ்டாலின் என்ன மாதிரியான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளோம். ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த அதிகாரிகள் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்த்து சென்றதாக அண்ணாமலை கூறியுள்ளார். 

மேலும், தவறு ஏதும் செய்யாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டுள்ளது. பழனிவேல் தியாகராஜனின் துறையை மாற்றியது மதுரைக்கு செய்த துரோகம். சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்குவது சரியா? மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநில அரசு விரைந்து குறைகளை சரிசெய்ய வேண்டும்.

இதையும் படிங்க;- சிஎஸ்கே வெற்றிக்கான வின்னிங் ரன் அடித்தவர் எங்க பாஜக கட்சி காரியகர்த்தா ஜடேஜா தான்..! அண்ணாமலை அதிரடி

பிரிமியர் லீக் தொடரில் திராவிட மாடல், குஜராத் மாடலை தோற்கடித்ததாக கூறுகின்றனர். அப்படியெனில் தமிழர்களே இல்லாத சென்னை அணி 3 தமிழர்களை கொண்ட குஜராத் அணியை வீழ்த்தியதற்காக திமுகவினர் பெருமை பெற்றுக்கொள்வார்களா?  என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!