திமுக தலைவரானார் முக ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்...

By sathish kFirst Published Aug 28, 2018, 10:46 AM IST
Highlights

கருணாநிதி மறைவை அடுத்து  திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், இன்று நடந்த பொதுக்குழுவில் கட்சியின்  இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுகவின் பொருளாளராக துரை முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் முதல் தலைவராகத் தொடர்ந்து பதவியில் இருந்து வந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. அவரைத் தொடர்ந்து இரண்டாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஸ்டாலின்.

திமுக பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வந்திருந்தாலும், அண்ணா தன்னை பொதுச் செயலாளர் என்றே அழைத்துக் கொண்டார். “எனது தலைவர் எப்போதும் பெரியார்தான். எனவே திமுகவுக்கு தலைவர் என்று யாரும் இருக்கமாட்டார்கள்” என்று கூறி பொதுச் செயலாளராகவே கட்சிக்குத் தலைமையேற்று செயலாற்றி வந்தார் அண்ணா.

ஆனால் அவருக்குப் பின்னர் தலைவராக வந்த கருணாநிதி கால ஓட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக பேராசிரியர் க.அன்பழகன் நியமிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவி அதிகாரங்கள் இல்லாத, வெறும் அலங்காரப் பதவியாக மாறியது. இருந்தாலும் அன்பழகன் தொடர்ந்து பொதுச் செயலாளராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் கருணாநிதி மறைவை அடுத்து  திமுகவில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஸ்டாலின் போட்டியிடும் நிலையில், ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவியும் காலியாகும். இந்த 2 பொறுப்புகளுக்கும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்திற்கு வந்த ஸ்டாலின்,   திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனுவை அளித்தார்.

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்து இருந்தனர். இந்நிலையில், திமுக பொதுசெயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்த பொதுக்குழுவில்  திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். கட்சியின் பொருளாளராக முதன்மைச் செயலாலராரக இருந்த துரைமுருகன் அறிவிக்கப்பட்டார்.

click me!