மு.க.அழகிரி வேகமானவர்... அஞ்சாநெஞ்சருடனான தொடர்பை சொல்லி மு.க.ஸ்டாலின் தரப்பை அதிர வைக்கும் கே.பி.ராமலிங்கம்.!

By Thiraviaraj RMFirst Published Apr 18, 2020, 3:20 PM IST
Highlights

திமுக விவசாய அணி செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்திற்கு பின்னணியில் அவர் மு.க.அழகிரிக்கு தீவிர விசுவாசமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து மன திறந்துள்ளார் கே.பி.ராமலிங்கம்.
 

திமுக விவசாய அணி செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்திற்கு பின்னணியில் அவர் மு.க.அழகிரிக்கு தீவிர விசுவாசமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து மன திறந்துள்ளார் கே.பி.ராமலிங்கம்.

’’எனது ராஜ்யசபா எம்.பி பதவி காலம் முடிந்த பிறகு நான் மீண்டும் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. அடுத்தடுத்து வந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கவில்லை. பிறகு எப்படி பதவிக்காக ஸ்டாலினை எதிர்ப்பதாக சொல்வார்கள்? அதுதவிர எனது ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்ததும் 2016ம் ஆண்டு. என்னை கட்சியிலிருந்து அவர் நீக்கியது இப்போதுதான். ஆக பதவிக்காக என்பது சிலரது தவறான புரிதல்.

 என்னை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் என்கிறார்கள். அது தவறு. நான் 1980 ஆம் ஆண்டு மற்றும் 84 தேர்தல்களில் அதிமுக சார்பாக ராசிபுரத்தில் நின்று வென்றவன். 1991 -ல் திமுக சார்பாக எம்.பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். அடுத்து வந்த 1996, 98 நாடாளுமன்றத் தேர்தல்களில் வென்றேன். ஆனால், 2002 ஆம் ஆண்டு வாக்கில்தான் அழகிரியை நான் நேரில் சந்தித்துப் பேசினேன். அவர் வேகமானவர். ஆகவே அவரை பிடிக்கும். அதனால், அவருடன் நன்றாகப் பழகிய அதே நேரம் கட்சி தான் முக்கியம் என்று அவர் நீக்கப்பட்ட பிறகும் தொடர்ந்தேன். பிறகு ஏன் அழகிரி ஆதரவாளர்  எனச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை’’எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!