சோடாவில் சேவிங் லோசனை கலந்து... சரக்கு கிடைக்காததால் கொரோனாவை விஞ்சும் கொடூரம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 4, 2020, 10:45 AM IST
Highlights

மது கிடைக்காமல் மன உளைச்சலில் இறப்பவர்களின் எண்ணிக்கை கொரோனா பாதித்தவர்களை விட தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
 

21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுபானம் கிடைக்காமல் பலரும் மன உளைச்சலுக்கு ஆளகி இருக்கும் நிலையில், போதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஊரடங்கு உத்தரவால்  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி மது வெறியர்கள் மயங்கித் தவிக்கின்றனர். போதைக்காக பல்வேறு வஸ்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படியொடு சம்பவம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறி அதிர வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தசி சேர்ந்த அன்வர் ராஜா, அவரது தோழர்களான அருண் பாண்டி, அசன் மைதீன் உள்ளிட்ட நண்பர்களுக்குடன் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் சரக்கு கிடைக்காமல் அந்த நண்பர்கள் மருதலித்துள்ளனர். 

போதையேற்றிக்கொள்ள துடித்த அவர்கள் புதிய யுக்தியை கையாள முயற்சித்தனர்.  அப்போது, சோடாவில் சேவிங் லோசனை கலந்து குடித்தால் போதை ஏறும் என்பதை கேள்வி பட்ட அவர்கள் அதை அப்படியே செய்து பார்த்துள்ளனர். அந்தக் கலவையை குடித்த சிறிது நேரத்தில் மூவரும் மயங்கி சரித்து விழுந்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருண் பாண்டி, அசன் மைதீன் இருவரும் உயிரிழந்தனர்.அன்வர் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு முடிய இன்னும் 10 நாட்கள் இருப்பதால் சரக்கு கிடைக்காத குடி வெறியர்கள் இன்னும் என்னென்ன விபரீதங்களை நிகழ்த்தப்போகிறார்களோ..?

மது கிடைக்காமல் மன உளைச்சலில் இறப்பவர்களின் எண்ணிக்கை கொரோனா பாதித்தவர்களை விட தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
 

click me!