குற்றவழக்குகளில் தவறான தகவல்கள்... உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு..!

By Thiraviaraj RMFirst Published Jun 26, 2021, 11:16 AM IST
Highlights

உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று அபார வெற்றிப் பெற்றார். தன்னை எதிர்த்து நின்ற பாமக வேட்பாளர் கசாலியை இவர் 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும் இதனால் அவருடைய வேட்புமனு ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ரவி அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் நட்சத்திர வேட்பாளராக கருதப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

click me!